மருந்து மற்றும் வாசனை / நறுமணப்  பயிர்கள் 
           
          மருந்து பயிர்கள் அவுரி: கேசியா  அங்குஸ்டி போலியா 
          1.அவுரியில்  வெளியிடப்பட்ட இரகங்கள் என்னென்ன? 
             
            அவரியில் கே கே எம் செ 1 மற்றும் ஏ.எல்.எஃப் டி  2 ஆகிய இரண்டு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கே கே எம் செ 1 தமிழகத்தில் செய்ய  ஏற்ற இரகமாகும். 
             
            2.ஒரு  எக்டரில் சாகுபடி செய்வதற்கு எவ்வளவு அவுரி விதைகள் தேவைப்படுகின்றன? 
             
            ஒரு எக்டருக்கு சுமார் 15 முதல் 20 கிலோ அவுரி வதைகள்  தேவைப்படுகின்றது. 
             
            3.அவுரி  சாகுபடிக்கேற்ற பருவம் எது?  
             
            அவுரியை பிப்ரவரி - மார்ச் மற்றும் ஜீன்-ஜீலை மாதங்களில்  சாகுபடி செய்யலாம். 
             
            4.அவுரி  சாகுபடிக்கு எவ்வளவு உரம் தேவைப்படுகின்றது செயற்கை உரங்கள் ஏதும் இட வேண்டுமா? 
             
            ஒரு எக்டருக்கு 10-15 டன் மட்கிய தொழுவுரம் மற்றும்  முறையே 25, 25 மற்றும் 40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை இடவேண்டும். தழைச்சத்தினை  இரண்டு பிரிவுகளாக பிரித்து விதைத்த 40 மற்றும் 80வது நாட்களில் இடவேண்டும். அவுரியின்  செயற்பாடு, அங்கக மற்றும் செயற்கை உரங்களை இணைந்து அளிக்கும்போது மேம்படுகின்றது. 
            
         |